கன்னியாகுமரி மாவட்டம், சித்திரங்கோடு அருகே கல்குவாரியில் பாறைகள் உடைக்க வைத்த வெடி விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்தனர்.
காயக்கரையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் வழக்கம்போல் பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.