திருச்சி உறையூரிலுள்ள வெக்காளி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது.
இதனை ஒட்டி, வெக்காளி அம்மன் உற்சவ மண்டபத்தில் தங்க கவசம் சாற்றப்பட்டு, ஊஞ்சலில் எழுந்தருளினார்.
பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.