விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
மீனம்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தனது மகளின் முதுகலை படிப்புக்காக, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் வட்டிக்குப் பணம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடன் தொகையை கேட்டு ஜெயச்சந்திரனுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவரது மனைவி ஞானபிரகாசி மற்றும் மகள் சர்மிளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக ஆறுமுகம், ராஜகுமாரி, குருவம்மாள் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.