தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட இரண்டு பேரை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை இவர் அப்பகுதியிலுள்ள பூங்கா முன்பு மீன்கடை நடத்தி வந்த நிலையில் வழக்கம் போல், இரவு கடையை மூடிவிட்டு அங்கேயே உறங்கியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மீன் வியாபாரி வெள்ளதுரையையும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.