தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் அதிமுகவை வழிநடத்த வாருங்கள் என வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் இடையே சர்ச்சை எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ,அதிமுகவை வழிநடத்த சசிகலா வரவேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பாவூர்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
சசிகலாவின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் அதிமுகவினர் இடையே மீண்டும் கட்சி தலைமை குறித்த சர்ச்சை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.