ஆலங்குளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், நாச்சியார்புரம் விலக்கு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது, நான்கு கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீன், சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.