திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 43 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது பயணி ஒருவரின் டிராலி பையில் 43 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.