கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிக்ள் வேதனை அடைந்தனர்.
பரளி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்கிற நபர் 6 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் விவசாயம் செய்திருந்தார்.
இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி முளைப்பு ஏற்பட்டது.
இதனால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் விவசாயி சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.