முல்லைப்பெரியாறு அணையை உடைப்பேன் என கேரளாவில் பிரச்சாரம் செய்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் ரசூல்ஜோய் தோல்வியடைந்தார்.
தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவேண்டும் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்தால் தானே அணையை உடைப்பேன் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரசூல்ஜோய் இடுக்கியில் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரசூல்ஜோய் 4 ஆயிரத்து 437 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இதில் நோட்டா பெற்ற வாக்குகள் 9 ஆயிரத்து 519 என்பது குறிப்பிடத்தக்கது.