திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாதிரிவேடு காவல் நிலையம் முன்பு உள்ள விவசாய நிலம் அருகே பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்துக்கொண்டிருந்தது.
அப்போது அருகிலுள்ள விவசாய கிணற்றில் மாடு தவறி விழுந்துள்ளது. இதைக்கண்ட சுப்பிரமணி என்பவர் கிணற்றுக்குள் இறங்கி அங்கிருந்தவர்களின் உதவியோடு மாட்டை கயிறு கட்டி மீட்டார்.
இந்நிலையில் உயிருக்கு போராடிய பசுமாட்டை பத்திரமாக மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.