தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையான ஆட்சியை அளிக்கும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். எனவே 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தரும் என்றும் அவர் கூறினார்.