காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.
இதையடுத்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 6-ம் நாளில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் பட்டாடை, தங்க ஆபரணங்கள் அணவிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தாயார்களுடன்சுவாமி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.