திருச்சியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டன.
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் ஆண்டுதோறும் புறா பந்தயம் நடைபெறுவது வழக்கம். பந்தயத்தில் பங்கேற்கும் புறாக்கள் எல்லையை விட்டு வெளியே பறக்க கூடாது, வானத்தில் வட்டமடித்தவாறு தொடர்ந்து 5 மணி நேரம் பறக்க வேண்டும், குறிப்பிட்ட பகுதிகளில் புறாக்கள் கர்ணம் அடிப்பதை உறுதி செய்ய வேண்டும், நடுவர்கள் குறிப்பிடும் இடத்தில் அமர வேண்டும் என்பது போட்டியின் விதியாக உள்ள நிலையில், எந்தப் புறா அதிக நேரம் பறக்கிறதோ அந்தப் புறாவுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 3ம் ஆண்டு புறா பந்தயம் திருச்சி மாநகர அளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்ட நிலையில், பந்தயத்தில் வெற்றி பெற்ற புறாக்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய், 12 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.