ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், வட்டி விகிதம் 6.50 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024-2025 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆக இருக்கும் என்றும் கூறினார்.
மூன்றாவது காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும் நான்காவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றம் இன்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.