திருச்சி காந்தி மார்க்கெட்டில் குப்பைகள் அள்ளப்படாததாலும், மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படாததாலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.
இதனால் மார்க்கெட் வரும் பொதுமக்கள், மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.