பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் பரிதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்லா மற்றும் SpaceX CEO எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள தமது நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.