திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேநீர் கடை ஊழியர் வீட்டில் 13 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம், தேனீர் கடையில் பணி செய்து வருகிறார்.
இவர், தனது நிலத்தை விற்ற பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், அவர் திண்டுக்கல் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், 13 லட்சம் பணம் மற்றும் நகையை அவரது வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல அடுத்தடுத்து ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.