தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
மாணவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் 4 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.