மயிலாடுதுறையில் மின் வாரியத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயில் இடங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும்நிலையில், மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.