கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.