வருவாய் துறையினர் முறையாக பணி செய்யத் தவறினால் பணியிடை நீக்கம் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆம் பசலி வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடக்கி வைத்த இந்நிகழ்வில் நேமலூர், கண்ணங்கோட்டை உள்ளிட்ட 12 கிராம மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.