டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள், ஆப்கானிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால், நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.