வாரத்தின் கடைசி வா்த்தக தினமான நேற்று பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், முந்தைய வா்த்தக தினத்தைவிட ஆயிரத்து 618 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 693 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, முந்தைய வா்த்தக தினத்தைவிட 468 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 290 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாது என்று ரிசா்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம், வங்கி, வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயா்வு கண்டன.