டெல்லியில் நடைபெற இருக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தென்னக இரயில்வேயின் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளைய தினம் 18-வது மக்களவையின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தரப்பினர் பங்கேற்க உள்ள நிலையில் தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை கோட்டத்தின் மூத்த உதவி லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.