எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது கண்டனத்துக்குரியது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
கிராமப்புற மாணவர்களும் மருத்துவப் படிப்புக்கு தேர்வானதால், நீட் தேர்வு குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யாகியுள்ளன என அவர் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறிய முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் செயல் என தெரிவித்தார்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது எனவும் கூறினார்.