டெல்லியில் ராமோஜி ராவ் படத்திற்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமோஜி குழும தலைவர் ராமோஜிராவ் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி கார்ப்பரேட் அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் டெல்லியில் ராமோஜிராவ் படத்திற்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
breath