சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.