இங்கிலாந்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கத்தில் ஷாப்பிங் செய்ததால் கடனில் மூழ்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி கி நைப்ஸ் என்ற பெண், பாராசோம்னியா எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தில் எழுந்து சுயநினைவு இல்லாமலேயே நடப்பது, பேசுவது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.
அந்த வகையில் பாராசோம்னியாவால் பாதிக்கப்பட்ட கெல்லி, ஒரு படி மேலே சென்று தூக்கத்தில் ஷாப்பிங் செய்துள்ளார். இதனால் அவருக்கு இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது.