ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக 6 ஆயிரம் குளிரூட்டப்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக வெயில் சுட்டெரித்து வருவதால் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு டெலிவரி ஊழியர்களின் உடல்நலன் கருதி, அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.