தஞ்சையில் இரு வேறு இடங்களில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் நோக்கி சென்ற நகர பேருந்து, கரந்தை பகுதியிலேயே பழுதாகி நின்றது.
அதேபோல், தஞ்சை காந்திஜி சாலையிலும், அரசுப் பேருந்து ஒன்று பழுதாகி நின்றது. காலை நேரத்தில் பேருந்துகள் பழுதானதால் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.