ஒரு மனிதனுடைய உயிரை காப்பாற்ற ரத்தம் முக்கியமானதாக கருதப்படுவதால் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை போர் நினைவு சின்னத்தில் தொடங்கி நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் நீதிபதி நக்கீரன் பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்றும், ஒரு உயிரை காப்பாற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற மாரத்தான் போட்டிகளை நடத்தி ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு பயன்பெறும் வகையில் ரத்த தானம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ரத்த தானத்தால் ஒருவர் காப்பற்றப்படுவார் என்றால் அனைவரும் சிந்தித்து ரத்த செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.