பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக மோடி பதவியேற்கவுள்ளதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியின் எல்லைகள் மற்றும் போக்குவரத்து சோதனை மையங்களில், தீவிர தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள சர்வதேச தலைவர்கள் தங்கியுள்ள இடங்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மாளிகை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், டெல்லி முழுவதும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பதாகைகளை ஆங்காங்கு நிறுவியுள்ளனர்.