தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள் அதிக அளவில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
புதிய பாரதத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள்’ என்ற, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு கோவையில் தொடங்கியது.
அகில பாரதிய ராஷ்ட்ரீய சாக் ஷிக் மஹாசங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
தமிழக பாடத்திட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த பாடங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மாறாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி, மருது சகோதரர்கள் நினைவு தினம், முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதில்லை என்றும் ஆர்.என்.ரவி கூறினார்.