திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கும், அவரது அத்தை மகளான சௌமியா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சௌமியாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து மாமியார் லதாவிடம் முறையிட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது விவேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருமகன் விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















