தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி, அரசலாற்றங்கரையில் தர்ப்பை புல்லினால் அமைக்கப்பட்ட அம்மன் உருவம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஆகாச அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருள, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது அம்மன் மீது பூக்களை தூவி பக்தர்கள் வழிபட்டனர்.