உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் 148-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கல்லறையில், மாவட்ட ஆட்சியர் அருணா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உதகை தாவரவியல் பூங்காவை கடந்த 1848 -ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த மெக் ஐவர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்து 1867-ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. சுமார் 19 வருடங்களாக மெக் ஐவர் உழைத்து தாவரவியல் பூங்காவை உருவாக்கினார். இவர், கடந்த 1876 -ம் ஆண்டு ஜீன் மாதம் 8 -ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அவரது நினைவை போற்றும் வகையில், செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள அவரது கல்லறையில் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.