தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறித்த விபரங்களை தற்போது பார்க்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, பாஜக 240 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல், லோக் ஜனசக்தி 5 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம்,
ஜனசேனா, ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ், அப்னா தளம், Asom Gana Parishad, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் 6 தொகுதிகளிலும் என தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 293 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.