நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்கும் மோடி, இரு முறைக்கு மேல் பதவி வகித்த அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் . ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்1932 முதல் 1944 வரை நான்கு அதிபர் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். இரு முறைக்கு மேல் பதவி வகித்த கடைசி அமெரிக்க அதிப்ர் ரூஸ்வெல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் முன்னாள் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் 2005 முதல் 2017 வரை தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.அவரது வாக்கு சதவீதம் 2009 மற்றும் 2017ஆம் ஆண்டு சரிந்தது.
நவீன சிங்கப்பூரின் நிறுவனரான லீ குவான் யூ, 1968 – 1988 ஆண்டுகளில் தொடர்ந்து ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஜவஹர்லால் நேரு 1952 1957, 1963, ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார்.