அதிக அளவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் தனியார் அமைப்பு சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகள் நாளை திறக்க உள்ளதை யொட்டி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நிறைவடைந்துள்ளது” என்றார்.
மேலும், “மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் “ஒருபுறம் சாலை பணிகள், மறுபுறம் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.