ஒடிசாவில் முதல் முறையாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எம்எல்ஏ-வாக தேர்வாகியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் பாராபதி-கட்டாக் தொகுதியில் போட்டியிட்ட சோபியா ஃபிர்தஸ் என்ற இஸ்லாமிய வேட்பாளர், 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஒடிசா பேரவைக்கு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன்முறையாக தேர்வாகியுள்ளார்.
ஒடிசா காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது மொகிமின் மகளான சோபியா, பெங்களூரு ஐஐஎம்-இல் நிர்வாக பொது மேலாண்மை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.