ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், காவலா்களின் ஆரோக்கியம், உடல் திறனை மேம்படுத்தும் வகையிலான ஓட்டப் பயிற்சி நடைபெற்றது.
திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் திருவாடானை, திருப்பாலைகுடி, எஸ்.பி. பட்டினம், ஆா்.எஸ். மங்கலம், தொண்டி, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் ஆகியோர் பங்கேற்றனா்.
திருவாடனை பேருந்து நிலையத்திலிருந்து சின்னக் கீரமங்கலம் ரவுண்டானா வரை காவலர்கள் ஓட்டப்பயிற்சி செய்தனர்.
தொடர் பணி சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காவலர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த தவறுவதால், வாரம் ஒரு முறை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும், நடை பயிற்சியும் அவசியம் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.