ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் ரியாசி மாவட்டம் சிவ் கோரி கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பக்தர்கள் சிலர் காட்ரா டவுன் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, இந்த சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.