மத்தியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டதையொட்டி, பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. இதையொட்டி, அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராபுனேயில் மேளதாள முழக்கத்துடன் நடனமாடி பாஜக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டாடினர்.
இதேபோல, பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்கியும் கொண்டாடினர். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆட்டோவில் சென்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி பாஜகவினர், கொண்டாடினர்.