புதிய மத்திய அமைச்சரவையில், சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 61 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றும், 11 பேர் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்த புதிய அமைச்சரவையில் 7 முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
24 மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 9 பேரும், பீகாரிலிருந்து 5 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். அமைச்சராக பதவியேற்றுவர்களில், 27 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பையும், 5 பேர் பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள்.
கடந்த முறை மத்திய அமைச்சரவையில் 6 பெண்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இம்முறை 7 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.