சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாடுஅவிழ்க்கும் நிகழ்ச்சியின் போது மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
படைத்தலைவி அம்மன் கோயிலின் திருவிழாவை ஒட்டி மாடு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் சரண், மற்றும் கிச்சன் என்பவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.