டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.