நடிகர் சூரி மதுரை செல்லூர் பகுதியிலுள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கருடன் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார்.
முன்னதாக, ரசிகர்கள் நடிகர் சூரியை சூழ்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்து வரவேற்பு கிடைத்துள்ளதால், இதே பாதையில் பயணிக்க உள்ளதாகவும், அதே சமயம் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.