தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீர்வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்கவும், மெயின் அருவியில் மட்டும் ஓரமாக நின்று குளிக்கவும் அனுமதி அளித்து வனத்துறை உத்தவிட்டுள்ளது.