இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமரானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டின் சட்டங்களை மதிக்கக்கூடியவர் என்றும் மக்களுக்கு பாஜக மீது அதிருப்தி இல்லை எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், பிரதமரிடம் கச்சத்தீவை மீட்கவும், தமிழீழம் அமைக்கவும் வலியுறுத்துவேன் எனவும் தெரிவித்தார்.