திமுக பொதுமக்கள் உயிருடன் விளையாடுகிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 26, 2026, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பொதுமக்கள் உயிருடன் விளையாடுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jun 10, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழுதடைந்த பேருந்துகளைப் பயன்படுத்தி, பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை திமுக நிறுத்தி விட்டு, புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விருதுநகர் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதும், 38 பேர் படுகாயம் அடைந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்த சகோதரி குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பேருந்து ஓட்டுநர், தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டினை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதும், அதன் காரணமாக, ஊழியர்கள் அதிக பணிச் சுமைக்கு ஆளாவதும் தொடர்கதை ஆகியிருக்கிறது.

மேலும், முறையான பராமரிப்பின்றி, அரசுப் பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதும், இதனால் பயணிகள் அல்லலுக்குள்ளாவதும் தினசரி செய்திகளாகியிருக்கின்றன.

காலி பணியிடங்களை நிரப்புவோம், புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறது திமுக அரசு.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், காலி பணியிடங்களை நிரப்பவும், பழுதடைந்த பேருந்துகளைப் பயன்படுத்தி, பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு, புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் திமுக அரசு முன்வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMK is playing with public life! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

சட்டத்தை மதிக்கக்கூடியவர் பிரதமர் மோடி – மதுரை ஆதினம் !

Next Post

பைக்காரா படகு இல்லத்திற்கு விரைவில் செல்ல அனுமதி – வனத்துறை!

Related News

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies